தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டு, பொலிஸார் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
தியாக தீபம் திலீபன் நினைவாக நடத்தப்படும் பேரணியை 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளர்.
இந்த மனு தொடர்பான ஆட்சேபனைகளை இன்று நீதிமன்றில் நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.