2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (செப்ரெம்பர் 21) நாடாளுமன்றில் அறிவித்தார்.
பரீட்சைக்கான திகதிகளை பரீட்சைகள் ஆணையாளர் அடுத்தவாரம் அறிவிப்பார் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்படவிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.