9 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி ஒருவர் ஆறு வருடங்களின் பின்னர் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமாக்கப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிச் சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்துள்ளது.
இந்தச் சிறுமி ஆறு வருடங்களுக்கு முன்னர் (சிறுமிக்கு 9 வயது) அயல் வீட்டிலிருந்த ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விடயம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவர் பாதுகாப்பு இல்லத்துக்கு சிறுமி அனுப்பப்பட்டார்.
ஆறு ஆண்டுகள் அங்கிருந்த சிறுமி கடந்த ஜனவரி மாதம் மீண்டும் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டார். தற்போது சிறுமிக்கு 15 வயதாகும் நிலையில் அவர் கர்ப்பமாகியுள்ளார்.
கர்ப்பமான நிலையில் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிறுமியின் சிறிய தந்தை சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது சிறுமி மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.