கிளிநொச்சி, கோணாவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் உடல் ஊற்றுப்புலம் கிராமத்தின் நாற்சந்தியில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 வயதுடைய பு.தினேஸ்கரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கொலை செய்யப்பட்டு நாற்சந்தியில் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்படுகின்றது.
நேற்று இரவு (செப்ரெம்பர் 25) நாற்சந்தியில் உடல் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.
உயிரிழந்தவரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுகின்றன என்று கூறப்படுகின்றது. அதனால் இவர் தாக்க்பட்டுக் கொலை செய்யப்பட்டு சந்தியில் வீசப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்தவருக்கு ஒரு வயதுக்கும் குறைவான வயதில் குழந்தை உள்ளது என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்.