“என்ன பழக்கம்னா இது?” – சலித்துக் கொண்ட யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர்!

Yarl Naatham

நாட்டில் இல்லாத ஒன்றை நடைமுறைப்படுத்தக் கோருவது யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் நடக்கின்றது என்று சலித்துக் கொண்டார் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் அனைத்து இடங்களிலும் தனியார் நிறுவன முச்சக்கரவண்டிச் சேவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டும்தான் அதைத் தடுக்க வேண்டும் என்று கோருகின்றனர். அதேபோன்று சந்தைகளில் கழிவு நடைமுறை இங்கு மட்டும்தான் நடைமுறையில் இருக்கின்றது. அதை நிறுத்த முடியாது என்கின்றனர் என்று தெரிவித்தார் அவர்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பித்துள்ள தனியார் நிறுவன முச்சக்கர வண்டிச் சேவைக்கு தடை விதிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிச் சாரதிகள் கோரி வருகின்றனர்.

நேற்று நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

ஆனால் அனுமதி பெறப்பட்டு மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் நிறுத்தும் அதிகாரம் இல்லை என்று தடாலாடியாகக் கூறிவிட்டார் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர். இந்தச் சந்தர்ப்பத்திலேயே அவர் மேற்கண்டவாறு சலித்துக் கொண்டார்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!