வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த்திருவிழா இன்று (செப்ரெம்பர் 28) பெரும் திரளான பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இன்று காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகணித்த வல்லிபுர ஆழ்வார் பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
தேர்திருவிழாவில் பங்குகொண்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர். அங்கப்பிரதட்சணம், காவடி, அடி அழித்தல், கற்பூரச் சட்டி ஏந்துதல் என்று அடியார்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியதைக் காணமுடிந்தது.
இன்று கற்பூரச் சட்டி ஏந்திய பெண்களில் ஒருவர் வழமைக்கு மாறாக வகையில் கற்பூரச் சட்டிகளை ஏந்திச் சென்றமை பலரது கவனத்தையும் கவர்ந்தது.
வழமையாக காவடிகளே விதம்விதமாக எடுக்கப்படும். இன்று வழமைக்கு மாறாகப் பல கற்பூரச் சட்டிகளை ஏந்தி இந்தப் பெண் தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார்.