மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான மின்சார சபையின் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு நீர் மின் உற்பத்தி நடைபெறவலில்லை. அதனால் மின் உற்பத்திக்குக் கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளன. அதை ஈடுசெய்வதற்கு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளது என்று மின்சார சபை தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மின்சார சபையின் மின் கட்டண உயர்வு கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கம் மின் மற்றும் நீர் கட்டணங்களை உயர்த்தவும், புதிய வரிகளை விதிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நுகர்வோர் அதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.