News

எரிபொருள் விலைகளில் இன்று முதல் மாற்றம்! – வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!

எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்த சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த மாற்றம் இன்று (ஒக்ரோபர் 1) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரகப் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்கு 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலையாக 420 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 348 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 61 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 417 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரகப் பெற்றோலின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று சினோபெக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts