அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (ஒக்ரோபர் 1) நடந்த வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மீது கடந்த மாதமும் தாக்குதல் நடத்தப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
கடந்த மாதம் யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டுப் பகுதியில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்திருந்தார்.
காரில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். தாக்குதலுக்கு இலக்கானவரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் கூறியிருந்தனர்.
தாக்குதலுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுத் திரும்பியிருந்த நிலையில், இன்று அவர் மீது மீண்டும் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
இன்று நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் அவர் கால் பகுதியில் படுகாயமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.