உயிருக்கு எமனான கேடிஎம் மோட்டார் சைக்கிள் – இளைஞன் பரிதாபச் சாவு!

Yarl Naatham

முல்லைத்தீவு, கோம்பாவிலில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

புதுக்குடியிருப்பு, 7ஆம் வட்டாரம் சிவநகரைச் சேர்ந்த 28 வயதான இ.கஜலகன் என்ற இளைஞரே உயிரிந்தவராவார்.

புதுக்குடியிருப்பில் இருந்து கைவேலி நோக்கி மோட்டார் சைக்கிளில் இவர் பயணித்த நிலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இளைஞரின் சடலம் மீட்கப்பட்டு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சடலம், உடற்கூற்றுப் பரிசோதனகைளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!