20 நாள்களேயான சிசுவின் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். 40 வயதான இவருக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது 20 நாள்களுக்கு முன்னர் அவருக்குக் குழந்தை கிடைத்துள்ளது.
இவர் நேற்றுத் திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டார்.
குழந்தை பிரசவித்தபோதும் அவருக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் இவர் கடந்த சில நாள்களாகக் கடும் மன அழுத்தத்தில் இருந்தார் என்று கூறப்படுகின்றது.
7 ஆண்டுகள் தவமிருந்து குழந்தை கிடைத்திருந்த நிலையில், அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளமை அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.