க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு – வெளியானது அறிவிப்பு!

Yarl Naatham

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான கா.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

பல இடங்களில் குறிப்பாகக் கஷ்டப் பிரதேசங்களில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் நிறைவு செய்யப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன், பரீட்சையைப் பிற்போட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, உயர்தரப் பரீட்சை தொடர்பான முடிவு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!