News

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இந்த ஆண்டு தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பரீட்சை சார்ந்த விரிவுரைகள், கற்பித்தல் வகுப்புக்கள், கருத்தரங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறிச் செயற்படுவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts