காங்கேசன்துறை வீதியில் உப்புமடம் சந்திக்கு அருகில் இன்று இரவு நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இரவு 9 மணியவில் நடந்துள்ளது.
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரெனத் திறக்கப்பட்டால் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அதனுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார் என்று சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.
சுன்னாகத்தைச் சேர்ந்த லோ.தர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மேசன் வேலை செய்பவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.