யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு கற்கும் மாணவி ஒருவரைக் காணவில்லை என்று பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அநுராதபுரத்தைச் சேர்ந்த இந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அருகில் உள்ள மருத்துவபீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் மாணவியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவரது கைபேசி செயழிழந்துள்ள நிலையில் பெற்றோர் யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.
மாணவி நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மாணவியைத் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டுக்கு அமையப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
I like this weblog very much, Its a really nice spot to read and find info.Raise range