அடுத்தவாரம் ஹர்த்தால் – தமிழ்க் கட்சிகள் சற்றுமுன் ஒன்றுகூடித் தீர்மானம்!

Yarl Naatham

முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் அடுத்த கட்டம் தொடர்பாக இன்று (ஒக்ரோபர் 6) மாலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய தமிழ்க் கட்சிகள் ஆராய்ந்தன.

7 தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடி எடுத்த தீர்மானத்துக்கு அமைய நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் அடுத்த கட்டம் தொடர்பாக இன்று அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.விக்னேஸ்வரன் இல்லத்தில் ஒன்றுகூடிய கட்சிகளின் பிரதிநிதிகள் அடுத்த கட்டம் தொடர்பில் ஆராய்ந்தனர்.

அடுத்த வாரம் கடையடைப்புப் போராட்டம் ஒன்று நடத்துவது என்று கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்தபோதும், அதற்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை.

வர்த்தக சங்கங்கள் மற்றும் ஏனைய தரப்புக்களுடன் கலந்துரையாடித் திகதியைத் தீர்மானிப்பது என்றும், திகதி எதிர்வரும் தினங்களில் அறிவிக்கப்படும் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் யாழ்நாதத்துக்குத் தெரிவித்தனர்.

Share This Article
error: Content is protected !!