கொழும்பு, கொள்ளுப்பிட்டி லிப்டன் சுற்றுவட்டத்தில் பயணித்த பஸ் ஒன்றின் மீது மரம் ஒன்று பாறி வீழ்ந்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (ஒக்ரோபர் 6) காலை பயணிகளுடன் பயணித்த இ.போ.ச. பஸ் மீதே மரம் பாறி வீழ்ந்துள்ளது. லிபெர்ட்டி பிளாசாவுக்கு முன்பாக மத்துகம – கொழும்பு பஸ் நிறுத்தத்தில் இந்த அனர்த்தம் நடந்துள்ளது.
கொழும்பில் இருந்து தெனிபாய நோக்கிப் பயணித்த பஸ்ஸே இந்த விபத்தில் சிக்கியது. இந்தச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 17 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.