யாழ்ப்பாணம், கட்டுவனில் இரு வீட்டிருக்கு இடையே இருந்த முரண்பாட்டால் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
இரு வீட்டாருக்கும் இடையே பாதை தொடர்பான முரண்பாடுகள் இருந்துள்ளன. அதில் ஒரு வீட்டின் உரிமையாளர் ஆறு மாதங்களின் முன்னர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர் குழு ஒன்றைப் பயன்படுத்தி அயல் வீட்டினரின் இரு மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு எரித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
அதையடுத்து மோட்டார் சைக்கிளைத் தீயிட வந்தவர்களில் ஒருவரின் மோட்டார் சைக்கிளை அயல் வீட்டினர் தீயிட்டு எரித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.