ரிக்-ரொக் செய்வதற்காக தோணியில் சென்ற இரு இளைஞர்கள் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று மட்டக்களப்பு நகர சபைக்கு உட்பட்ட நாலவடியில் உள்ள வாவியொன்றில் நடந்துள்ளது. மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதான த.கிருசாந்த் மற்றும் 18 வயதான பி.பிருஜனன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் ஏனைய நால்வரும் வாவிக்குள் தோணியில் சென்று ரிக்-ரொக் செய்துவிட்டுக் கரைக்குக் திரும்பியபோதே தோணி கவிழ்ந்துள்ளது. நால்வரும் நீரில் மூழ்கிய நிலையில் நால்வர் அந்தப் பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அந்தப் பகுதி மீனவர்களும், பொலிஸாரும் இணைந்து மீட்டு மட்டக்களப்புப் போதனா மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் காத்தான்குடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ரிக்-ரொக்கில் பிரபல்யம் அடைவதற்காக ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.