இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் நடத்தப்படவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை அடுதத ஆண்டு மே மாதத்தின் ஆரம்பத்தில் நடத்தப்படும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர், இது தொடர்பான அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் அடுத்த ஆண்டுக்குப் பிற்போடப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் யாவும் வழமைபோன்று திட்டமிட்ட திகதிகளில் நடைபெறும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.