யாழ்ப்பாணத்தில் தேசிய மட்டக் கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நடந்துவரும் கூடைப்பந்தாட்டத் திடலின் சுற்றாடல் குப்பை கூளங்களால் நிறைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இன்று (ஒக்ரோபர் 10) முதல் தேசிய மட்டக் கூடைப்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகின்றன. சுண்டிக்குழி, பழைய பூங்காவுக்கு அருகில் உள்ள யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்டச் சங்கத்தின் கூடைப்பந்தாட்டத் திடலில் இந்தப் போட்டிகள் நடக்கின்றன.
நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் எனப் பலர் வந்துள்ள நிலையில், கூடைப்பந்தாட்டத் திடல் சுற்றாடல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடைப்பந்தாட்டத் திடலின் சுற்றாடல் குப்பை, கூளங்களால் நிறைந்துள்ளது. அதேநேரம் அங்குள்ள மலசலகூடங்கள் பாவிக்க முடியாத அளவு சுகாதாரச் சீர்கேட்டுடன் காணப்படுகின்றன.
இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.