முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களைக் கண்டித்து எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ஹர்த்தால் போராட்டம் நடத்துவதற்குத் தமிழ்க் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நீதித்துறையின் சுயாதீனத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.
அதன் அடுத்த கட்டமாக ஹர்த்தால் ஒன்றை நடத்துவது என்று தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடித் தீர்மானம் எடுத்திருந்தபோதும், திகதி அறிவிக்கப்படவில்லை.
இன்று (ஒக்ரோபர் 9) யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் ஒன்றுகூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துரையாடலை நடத்தினர்.
எதிர்வரும் 20ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ஹர்த்தால் போராட்டத்தை நடத்துவது என்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.