வவுனியா, சின்னபுதுக்குளத்தில் நேற்று (ஒக்ரோபர் 9) இரவு நடந்த விபத்தில் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இரவு 9.30 மணியளவில் நடந்துள்ளது. மடுகந்தையில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த டிபென்டர் ரக வாகனமே விபத்துக்குள்ளனது.
வீதியின் நடுவே நின்ற மாட்டுடன் மோதிய டிபெண்டர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு மதிலை மோதி உடைத்து விபத்துக்குள்ளானது.
டிபெண்டர் ரக வாகனத்தில் பயணித்த விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 6 பேர் வவுனியா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளது என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.