பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தம்புள்ளவில் நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த 24 வயதான சாந்திமா ரணசிங்க என்பவரே உயிரிழந்துள்ளார்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையில் வீடு சென்றிருந்தபோதே விபத்தில் சிக்கியுள்ளார். நேற்று (ஒக்ரோபர் 10) அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் விபத்துக்குள்ளானார்.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்றுமாலை சிகிச்சை பயணின்றி உயிரிழந்தார்.
சந்திமா ரணசிங்க நேற்றுமுன்தினமே பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இருந்து விடுமுறை பெற்று வீட்டுக்குச் சென்றிருந்தார். இவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தின் சமூகப் பிரிவில் கடமையாற்றியிருந்தார்.