திடீரென உயிரிழந்த இளம் தாய் – யாழ்ப்பாணத்தில் நடந்த சோகச் சம்பவம்!

Yarl Naatham

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வடமராட்சி, வல்வெட்டித்துறையில் நடந்துள்ளது.

சிவரூபன் தேனுஜா என்ற 24 வயதுப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இவருக்குக் கடந்த 6ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

காய்ச்சல் தொடர்ந்தும் நீடித்ததால் கடந்த 9ஆம் திகதி வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் (ஒக்ரோபர் 11) பிற்பகல் அவர் உயிரிழந்தார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

தேனுஜாவுக்கு ஏற்பட்ட காய்ச்சல் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளிவரவில்லை. திருமணமாகிச் சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், இளம் தாயான இவர் திடீரெனக் காய்ச்சலலால் உயிரிழந்துள்ளமை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a comment
error: Content is protected !!