North

பதின்ம வயதுச் சிறுமிகள் எடுத்த விபரீத முடிவு – கிளிநொச்சியில் நடந்த சோகம்!

கிளிநொச்சியில் இரு சிறுமிகள் – நண்பிகள் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (ஒக்ரோபர் 16) இரண்டு மணியளவில் நடந்துள்ளது.

எமது இறப்புக்கு எவரும் காரணம் இல்லை என்றும், தங்களுக்கு வாழப் பிடிக்கவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு விட்டு அவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழினியின் வீட்டிலேயே இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

17 வயதான சுரேஸ்குமார் தணிகை, லோகேஸ்வரன் தமிழினி ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் நண்பிகள். கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டுப் பெறுபேற்றுக்காகக் காத்திருப்பவர்கள்.

நண்பிகள் இருவரும் தவறான முடிவு எடுத்தமைக்கான காரணம் தெரிய வரவில்லை. கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Posts