பிரான்ஸ் செல்லும் முயற்சியில் பிரிந்தது உயிர்! – சட்டவிரோத பயணங்களால் தொடரும் உயிரிழப்புக்கள்!

Yarl Naatham

கிளிநொச்சி, வட்டக்கச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற நிலையில் பெலாரஸ் நாட்டு எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வட்டக்கச்சி, மாயவனூரைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்று கூறப்படுகின்றது.

இவர் ஆள்கடத்தல் முகவர் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்றுள்ளார். விமானம் மூலம் ரஷ்யா சென்று, அங்கிருந்து பெலாரஸ், போலாந்து, ஜேர்மன் ஊடாக பிரான்ஸ் செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏழு பேர் கொண்ட குழு ஒன்று பெலாரஸில் இருந்து போலந்து செல்வதற்காக 700 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்க முயன்றிருக்கின்றனர். கடந்த 7ஆம் திகதி இவர் மனைவியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அவர் பெலாரஸ் எல்லையில் இருந்து சில கிலோமீற்றர் தூரத்தில் இருந்துள்ளார். தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும், தன்னை யாரேனும் காப்பாற்றினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்றும் கூறினார் என்று உறவினர்கள் வாயிலாக அறியமுடிகின்றது. அதன்பின்னர் அவர் தொடர்புகொள்ளவில்லை..

போலத்துக்குச் செல்லும் முயற்சியில் உடல் நலம் குன்றி இவர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இவருடன் சென்றவர்கள் இவரது உடலைக் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!