யாழ்ப்பாணத்தில் இளம் மனைவி கணவனால் அடித்துக் கொலை – அதிர வைக்கும் சம்பவம்!

Yarl Naatham

யாழ்ப்பாணம், நாவற்குழியில் இளம் பெண் ஒருவர் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (ஒக்ரோபர் 16) காலை நடந்துள்ள நிலையில், சந்தேகநபரான கணவன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான அஜந்தன் – யமுனா என்ற இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவியை கைகளாலும், கருக்கு மட்டையாலும் தாக்கிக் கொன்றுள்ளார் என்று தெரியவருகின்றது.

கணவர் 25 வயதுடையவர் என்றும், இவர் முன்னர் ஜெயில் தண்டனை அனுபவித்தவர் என்றும் பொலிஸார் கூறுகின்றார். தற்போது சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ” மனைவியை தாக்கிய பின்னர், வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். மனைவி உயிரிழந்தது எனக்கு தெரியாது” என சந்தேக நபர் தெரிவித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!