முல்லைத்தீவு கொக்குக்தொடுவாயில் இன்று (ஒக்ரோபர் 20) நடந்த வெடிப்புச் சம்பவம் ஒன்றில் காயமடைந்த நால்வர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள வேம்படிச் சந்தியில் வெலிஓயா செல்லும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைக்கு ஆயத்தமாகியபோதே இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களே காயங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் பணிக்குப் பயன்படுத்தும் மின்கலம் ஒன்றே வெடித்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.