News

புலிகளைக் காட்டிக் கொடுத்தார் பிள்ளையான் – தப்பியோடினார் கருணா – பகிரங்கப்படுத்தப்பட்ட இரகசியங்கள்!

பிள்ளையான் என்பவரே எமக்குத் தகவல் வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை எவரும் பிரிக்கவில்லை. புலிகள் அமைப்பின் விசாரணைக்குப் பயந்து, உயிருக்குப் பயந்தே அவர் தப்பியோடினார்.

இவ்வாறு இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொணரவில தெரிவித்தார்.

சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுடன் இடம்பெற்ற நேர்காணலியே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

நீங்கள் எப்படி புலனாய்வு அதிகாரி என்பதை நம்புவது என எழுப்பட்ட கேள்விக்கு, சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களை காண்பித்தார். அவரது சேவையை பாராட்டி வழங்கப்பட்ட சான்றிதழ்களையும் மொணரவில முன்வைத்தார்.

பிள்ளையான் என்பவரே எமக்குத் தகவல் வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது புலனாய்வுப் பிரிவில் உள்ள குழுதான்.

புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது. அந்த குழுதான் கொலைக்கும்பல். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டது என்று மொனரவில தெரிவித்தார்.

கருணா தொடர்பாகக் கூறும்போது, ‘சுமித்’ என்பவரை தெரியுமா என கருணாவிடம் கேளுங்கள், அந்த சுமித்தும் நான்தான். கருணாவை எவரும் பிரித்தெடுக்கவில்லை.

பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் புலிகளால் கருணா வன்னிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.மரண பயத்தால் அவர் செல்லவில்லை.

அதையடுத்து அவர்களை கொலை செய்வதற்கு வன்னியில் இருந்து பொட்டு அம்மானால் குழுவொன்று அனுப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபராக பெயரிடப்பட்ட – இந்தியாவில் இருந்து தப்பிவந்த ஒரேயொரு புலி உறுப்பினர் தலைமையில்தான் அந்த குழு அனுப்பட்டிருந்தது. இது கருணாவுக்கு தெரியவந்தது. இறுதியில் 20 பேரை கொலை செய்துவிட்டு கருணா தப்பியோடினார் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts