இன்று முதல் (ஒக்ரோபர் 20) நடைமுறைக்கு வரும்வகையில் மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் உயர்த்துவதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு வருடத்துக்குள் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்படும் சந்தர்ப்பம் இதுவாகும்.
நேற்றுச் கூடிிய பெர்துப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின் கட்டணத்தை உயர்த்தும் மின்சார சபையின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கத் தீர்மானித்தது என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ தெரிவித்தார்.
பயன்படுத்தப்படும் மின் அலகுகளுக்கு ஏற்ப மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும். இது தொடர்பான அறிவித்தல் வெளியாகும் என்று ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனமும் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை உயர்த்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது என்று அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பஸ்தீன – இஸ்ரேல் போரால் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகின்றது என்றும், அதனால் உள்நாட்டில் விலை அதிகரிப்பு தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.
லிட்ரோ நிறுவனத்தின் 12.5 கிலோ எடையுடைய எரிவாயு சிலிண்டர் ஒன்று 200 ரூபாவால் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.