போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பிரிட்டன் செல்ல முயன்ற பருத்தித்துறை இளைஞர் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான இந்த இளைஞர் நேற்றுக் காலை கட்டார் எயார்வேஸ் விமானத்தில் டோஹா சென்றுள்ளார்.
அங்கிருந்து அவர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையம் வந்து, அங்கிருந்து பிரிட்டன் செல்ல முயன்றுள்ளார்.
தனது பயண ஆவணங்களை கட்டுநாயக்க குடிவரவு – குடியகல்வு அதிகாரிகளிடம் கையளித்த நிலையில், இளைஞரின் விசா போலியானது என்று அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அதையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.