North

யாழ். இளைஞனுக்குக் காலனான ‘காரம் சுண்டல்’ வண்டில்! – சோகத்தில் பிரதேச மக்கள்!

யாழ்ப்பாணத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ஆனைக்கோட்டை, சேமசுந்தரம் வீதியைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன் என்ற 24 வயது இளைஞரே உயிரிழந்தவராவார்.

இந்த இளைஞர் சுண்டல் விற்பனை செய்யும் வண்டி ஒன்றைத் தயாரித்துள்ளார்.

அந்த வண்டிக்கு மின் விளக்குப் பொருத்திய பின்னர் சோதித்துப் பார்த்தபோதே இளைஞர் மின்சாரத்தின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார்.

மின்சாரத் தாக்கத்துக்கு இலக்கான இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆயினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் முன்னெடுத்தார்.

உடல் கூறாய்வு பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Related Posts