யாழில் மாயமாகும் மோட்டார் சைக்கிள்கள்! – பொலிஸாருக்கு தண்ணீர் காட்டும் திருடர்கள்!

Yarl Naatham

யாழ்ப்பாணம், இணுவிலில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிளே திருடப்பட்டுள்ளது என்றும், அதன் பெறுமதி சுமார் 5 லட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரமும் இணுவில் பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டிருந்தது.

அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 25 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மட்டும் சுமார் 14 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது. வங்கிகள், வர்த்தக நிலையங்கள் முன்பாக நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் பட்டப் பகலில் திருடப்படுவது சர்வசாதாரணமாகியுள்ளது.

மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றபோதும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. திருடப்பட்ட மோட்டார்சைக்கிள்களும் மீட்கப்படவில்லை.

திருடப்படும் மோட்டார சைக்கிள்கள் பாகங்களாக்கி விற்பனை செய்யப்பட்டலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் மோட்டார் சைக்கிள்களைத் திருடும் சிலர் அதைப் பயன்படுத்தி வழிப் பறிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

 

Share This Article
Leave a comment
error: Content is protected !!