யாழ்ப்பாணத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 10 பவுண் தங்க நகைகள், கைபேசிகள், வங்கி அட்டைகள் என்பனவும், வழிப்பறிக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த 24 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கோப்பாய் பிரதேசத்தில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார் என்றும், விரதகாலங்களில் ஆலயங்களுக்குச் செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறி செய்துள்ளார் என்றும் தெரியவருகின்றது.
சந்தேகநபரை யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான பொலிஸ் குழு கைது செய்துள்ளது.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.