Sport

சாதனை படைத்தது யாழ். போதனா மருத்துவமனை தாதியர் அணி!

தாதியர் சங்கத்தால் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட வலைப்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தாதிய அணி முதலிடத்தைப் பெற்றுச் சம்பியனானது.

நாடளாவிய ரீதியில் உள்ள அரச மருத்துவமனைகளின் தாதியர் அணிகள் இந்த வலைப்பந்தாட்டத் தொடரில் கலந்துகொண்டன.

சிறப்பான திறமையை வெளிப்படுத்தி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தாதிய அணி வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.

வெற்றியீட்டிய தாதிய வலைப்பந்தாட்ட அணிக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts