இன்று நள்ளிரவு (நவம்பர் 4) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுகின்றது.
12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 3 ஆயிரத்து 565 ரூபாவாகும்.
5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ஆயிரத்து 431 ரூபாவாகும்.
2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்புதிய விலை 688 ரூபாவும்.
இந்த விலைகள் கொழும்பு மாவட்டத்துக்குரியது. ஏனைய மாவட்டங்களில் எரிவாயு சிலிண்டரின் விலைகளில் மாற்றங்கள் காணப்படும்.