North

கொழும்பில் மீட்கப்பட்ட யாழ். இளைஞனின் உடல்! – மரணத்தில் நீடிக்கும் மர்மம்!

யாழ்ப்பாணம, தாவடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் உடல் கொழும்பு வெள்ளவத்தைக் கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், தாவடி என்ற முகவரியைக் கொண்ட 25 வயதான சர்வானந்தா கிருஷாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மீட்கப்பட்ட அடையாள அட்டையைக் கொண்டு இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

இவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Posts