சர்வதேசக் கிரிக்கெட் சபையால் வழங்கப்படும் உயரிய விருதான ஹோல் ஒப் பேம் (Hall of Fame) விருது இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் அரவிந்த டி சில்வாவுக்கு வழங்கப்படவுள்ளது.
சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் அரவிந்த டி சில்வா.
அரவிந்த டி சில்வா இலங்கைக் கிரிக்கெட் அணியில் 19 ஆண்டுகள் விளையாடியதுடன், 401 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு மட்டுமே இதுவரை இந்த உயரிய விருது கிடைத்திருக்கின்றது.
குமார் சங்ககார, முத்தையா முரளிதரன், மஹேல ஜெயவர்த்தன ஆகியோரே இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். தற்போது இந்த வரிசையில் அரவிந்த டி சில்வாவும் இடம்பெறவுள்ளார்.
இவருக்கான விருது எதிர்வரும் 14ஆம் திகதி மும்பையில் வைத்து வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.