எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ் மக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவிருப்பதை அடுத்தே மறுநாள் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறை வழங்கப்படும் திங்கட்கிழமைக்கான பதில் பாடசாலை நாளாக எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.