2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது 7 ஆயிரத்து 800 ரூபா வழங்கப்படும் நிலையில், 17 ஆயிரத்து 800 ரூபாவாக இந்தத் தொகை உயர்த்தப்படவுள்ளது.
அதேநேரம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 ஆயிரத்து 500 ரூபா உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது ஜனாதிபதியும், நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்.
அதேவேளை, மூத்த பிரஜைகளுக்கான மாதாந்த கொடுப்பனவான 2 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.