வவுனியாவில் தரணிக்குளம், குறிசுட்டகுளம் பிரதேசத்தில் இன்று (நவம்பர் 14) மாலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அங்குள்ள நீரேந்து பகுதி நீரில் மிதந்த உடலை அவதானித்த அந்தப் பகுதி மக்கள் இது தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணகளை ஆரம்பித்தனர். சடலம் நீரில் இருந்து மீட்கப்பட்டது.
சடலத்தில் இரு கைகள் மற்றும் ஒரு கால் இல்லை என்று தெரிவித்த பொலிஸார் அவை வெட்டி அகற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் 26 வயது மதிக்கத்தக்க பெண்ணுடையதாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஊகிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில், ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.