யாழில் நடந்த விபத்தில் 18 வயது இளைஞன் பலி – 14 வயதுச் சிறுவன் சிகிச்சையில்!

Yarl Naatham

யாழ்ப்பாணம், குருநகரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 வயதுச் சிறுவன் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளார்.

இந்த விபத்து கடந்த 9ஆம் திகதி நடந்துள்ளது. திரு நிலக்சன் என்ற 18 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் 14 வயதுச் சிறுவனை ஏற்றிச் சென்ற இவர் தலைக் கவசம் அணியாது பயணித்துள்ளார். வீதியில் உள்ள வேகத் தடை ஒன்றில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் இடதுபுறம் உள்ள மதிலுடன் மோதிப் பின்னர், வலதுபுறம் உள்ள மின் கம்பத்திலும் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனாத மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நிலக்சன் இன்று உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Share This Article
Leave a comment
error: Content is protected !!