பொன்னாலையில் வீதியோரப் பற்றைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Yarl Naatham

யாழ்ப்பாணம், பொன்னாலைச் சந்திக்கு அண்மையாகக வரதராஜப் பெருமாள் ஆலயத்துக்குச் செல்லும் வீதியோரம் உள்ள பற்றைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (நவம்பர் 18) மீட்கப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை, ஆறுகால்மடத்தைச் சேர்ந்த கந்தசாமி சேகரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. உயிரிழந்தவரின் மகன் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

இவர் தீபாவளி தினத்துக்கு முன்னர் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்தார் என்றும், இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது என்றும் இவரது மகன் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த சில தினங்களாக பொன்னாலையில் மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளார். சித்தசுவாதீனம் குறைந்தவராகத் தென்பட்ட இவர் கடந்த 14ஆம் திகதி இறுதியாக அந்தப் பகுதியில் காணப்பட்டார் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a comment
error: Content is protected !!