East

துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி பொலிஸாரால் இடித்தழிப்பு!

மட்டக்களப்பு, தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு பொலிஸாரால் இடித்தழிக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் போரில் உயிர் நீத்தவர்களின் உறவினர்களால் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு வந்தது.

இந்தத் தூபிக்கு எதிராக பொலிஸாரால் வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தூபி எந்தவித அனுமதியும் பெறாது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்தே பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தூபியை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து அந்தத் தூபி பொலிஸாரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

Related Posts