விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பதவி நீக்கக் கடிதம் சற்றுமுன்னர் அனுப்பப்பட்டுள்ளது என்று ரொஷான் ரணசிங்க கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் சபை விவகாரத்தால் ரொஷான் ரணசிங்கவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கடும் முரண்பாடுகள் எழுந்துள்ளன.
இலங்கைக் கிரிக்கெட் சபையைக் கலைத்து இடைக்கால நிர்வாகக் குழு அமைக்கப்பட்ட விடயத்தில் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்தநிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ரொஷான் ரணசிங்க பொலிஸ் முறைப்பாடு செய்திருந்தார். நாடாளுமன்றத்திலும் இது தொடர்பில் பிரஸ்தாபித்திருந்தார்.
தனது உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு ஜனாதிபதியும், சாகல ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினரே பொறுப்பு என்றும் அவர் கூறியிருந்தார்.