சாவகச்சேரியில் மின் தாக்கி நுணாவில் இளைஞன் உயிரிழப்பு!

Yarl Naatham

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பம் இன்று (28) காலை 9.30 மணியளவில் நடந்துள்ளது.

சாவகச்சேரி, நுணாவிலைச் சேர்ந்த 26 வயதான கஜந்தன் என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அலுவலகத்தில் தண்ணீர் துண்டிக்கப்பட்டதால், தண்ணீர் தொட்டியை ஆராய்வதற்காக மேலே ஏறிச் சென்று பார்த்தபோதே மின் தாக்கத்துக்கு இவர் உள்ளாகியுள்ளார்.

Share This Article
Leave a comment
error: Content is protected !!