எரிபொருள் விலைகள் இன்று (நவம்பர் 30) நள்ளிரவு முதல் திருத்தப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.
ஒக்டேன் 92 ரகப் பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 346 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரகப் பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 426 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 329 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 434 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலையாக 247 ரூபா நிர்ணாயிக்கப்பட்டுள்ளது.