வவுனியா, செட்டிக்குளம் நகரப் பகுதியில் கணவனும், மனைவியும் இனந்தெரியாதவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
72 வயதான பசுபதி வர்ணகுலசிங்கம் மற்றும் அவரது மனைவியான 68 வயதான கனகலட்சுமி ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தம்பதி நடத்திவரும் வியாபார நிலையத்துக்குப் பின்புறம் உள்ள தங்குமிடத்தில் இவர்கள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு வியாபார நிலையத்தை இவர்களது மகன் பூட்டிவிட்டுச் செல்ல, இவர்கள் இருவரும் வியாபார நிலையத்தின் பின்புறம் உள்ள தங்குமிடத்தில் தங்கியுள்ளனர்.
காலையில் வியாபார நிலையத்தைத் திறக்க வந்த மகன், அவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
சடலங்களுக்கு அருகில் 3 கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் 5 பவுண் தங்க நகை ஒன்று காணாமல் போயுள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் கூறுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
You have noted very interesting points! ps decent website.Blog monry