அச்சுவேலி, நாவற்காட்டில் இன்று நடந்த விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இந்த விபத்து நடந்துள்ளது. புத்தூரைச் சேர்ந்த சி.சியான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில், பட்டா ரக விற்பனை வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் பருத்தித்துறை மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.